மேலும் செய்திகள்
சாலையோரத்தில் தடுப்பு இல்லாததால் விபத்து அபாயம்
25-Apr-2025
உத்திரமேரூர்:உத்திரமேரூர் பேரூராட்சியில், கங்கையம்மன் கோவில் முதலாவது குறுக்கு தெரு, இரண்டாவது குறுக்கு தெரு என இரு தெருக்கள் உள்ளன. இந்த தெருக்களில் 40க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன.இந்த இரண்டு தெருக்களிலும் பல ஆண்டுகளாக சாலை அமைக்காமல், மண் சாலையாகவே இருந்து வருகிறது. இச்சாலைகளை பயன்படுத்தி அப்பகுதிவாசிகள் பல்வேறு பகுதிகளுக்கு தினமும் சென்று வருகின்றனர்.மழைநேரங்களில் இந்த மண் சாலைகள் சகதியாக மாறுவதால், அவ்வழியே பொதுமக்கள் செல்ல முடியாத நிலை உள்ளது.எனவே, கங்கையம்மன் கோவில் முதலாவது, இரண்டாவது குறுக்கு தெருக்களில், மண் சாலைகளை, கான்கிரீட் சாலைகளாக மாற்ற, பேரூராட்சி நிர்வாகத்திற்கு அப்பகுதியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
25-Apr-2025