உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / தோண்டாங்குளம் குளம் பராமரிக்க வலியுறுத்தல்

தோண்டாங்குளம் குளம் பராமரிக்க வலியுறுத்தல்

வாலாஜாபாத்:வாலாஜாபாத் ஒன்றியம், தேவேரியம்பாக்கம் ஊராட்சிக்கு உட்பட்டது தோண்டாங்குளம் கிராமம். இக்கிராமத்தில், உள்ளாவூர் - தோண்டாங்குளம் சாலையோரத்தில் விவசாய நிலங்களையொட்டி பொதுக்குளம் அமைந்துள்ளது.கடந்த ஆண்டுகளில், அப்பகுதி விவசாய நிலங்களுக்கான நிலத்தடி நீர் ஆதாரமாக இக்குளம் விளங்கி வந்தது. நாளடைவில் இக்குளத்தை சுற்றி உள்ள விவசாய நிலங்கள் சாகுபடி செய்யாத தரிசு நிலங்களானது.இதையடுத்து, இக்குளம், தற்போது கால்நடைகளின் தாகம் தீர பயன்பாடாக இருந்து வருகிறது.தற்போதைய கோடையில், தோண்டாங்குளத்தை சுற்றிலும் நீர்நிலைகள் வற்றிய நிலையில், இக்குளத்தில் கணிசமான நீர் இருப்பு உள்ளது.எனவே, நீர்வளமிக்க இக்குளத்தை துார்வாரி, குளக்கரையை சுற்றி கருங்கல் பதித்து பராமரிப்பு பணி மேற்கொள்ள வேண்டும் என, அப்பகுதியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை