உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / வரதராஜ பெருமாளுக்கு வரவேற்பு அளிக்குமிடத்தில் இடையூறு மண் குவியலை அகற்ற வலியுறுத்தல்

வரதராஜ பெருமாளுக்கு வரவேற்பு அளிக்குமிடத்தில் இடையூறு மண் குவியலை அகற்ற வலியுறுத்தல்

அய்யங்கார்குளம்:ஆண்டுதோறும் சித்ரா பவுர்ணமியன்று காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவில் நடவாவி உற்சவம், அய்யங்கார்குளம் கிராமத்தில் விமரிசையாக நடக்கும். அதன்படி நடப்பு ஆண்டு, சித்ரா பவுர்ணமியான நாளை மறுநாள் நடவாவி உற்சவம் நடக்கிறது.உற்சவத்தையொட்டி, அய்யங்கார்குளத்திற்கு வரும் வரதராஜ பெருமாளுக்கு, ஊர் எல்லையில் உள்ள கைலாசநாதர் கோவில் அருகில், விழா மேடைக்கான பந்தல் அமைத்து சிறப்பான வரவேற்பு அளிக்கும் நிகழ்ச்சி நடைபெறும்.இந்நிகழ்ச்சியில், அய்யங்கார்குளம் மற்றும் சுற்றியுள்ள பல்வேறு கிராமங்களைச் சேரந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பர். இந்நிலையில், சுவாமிக்கு வரவேற்பு அளிக்கும் இடத்தில், நெடுஞ்சாலைத் துறை சார்பில் சிறுபாலம் கட்டுமானப் பணி நடைபெறுகிறது.கட்டுமானப் பணிக்காக தோண்டப்பட்ட மண் குவியல் அகற்றப்படாமல் உள்ளது. இதனால், வரதராஜ பெருமாளுக்கு வரவேற்பு அளிப்பதில் இடையூறு ஏற்படும் சூழல் உள்ளது. எனவே, நடவாவி உற்சவத்திற்கு இடையூறாக உள்ள மண் குவியலை உடனே அகற்ற நெடுஞ்சாலைத் துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பக்தர்கள் வலியுறுத்தி உள்ளனர்.இதுகுறித்து காஞ்சிபுரம் உபகோட்டம், நெடுஞ்சாலைத் துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், 'அய்யங்கார்குளம் கிராமத்தில், வரதராஜ பெருமாளுக்கு வரவேற்பு அளிக்கும் இடத்தில் இடையூறாக உள்ள மண் குவியல், பொக்லைன் இயந்திரம் உதவியுடன், டிப்பர் லாரி வாயிலாக முழுதும் அகற்றப்படும்' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !