உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / உத்திரமேரூர் ஏரி மதகு சீரமைக்கும் பணி

உத்திரமேரூர் ஏரி மதகு சீரமைக்கும் பணி

உத்திரமேரூர்:உத்திரமேரூர் ஏரியில் அடைப்பு ஏற்பட்டுள்ள மதகு, தண்ணீர் வெளியேறும் பாதையை சீரமைக்கும் பணியில் நீர்வளத் துறையினர் நேற்று ஈடுபட்டனர். காஞ்சிபுரம் மாவட்டத்தில் மிகப்பெரிய ஏரியாக உத்திரமேரூர் ஏரி உள்ளது. இந்த ஏரியில் சேகரமாகும் தண்ணீரை கொண்டு, 15 கிராமங்களைச் சேர்ந்த 5,500 ஏக்கர் பரப்பளவு விளைநிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. இங்குள்ள, 18 மதகுகளின் வழியே ஏரியில் சேகரமாகும் தண்ணீரானது, பாசனத்திற்கு கால்வாய்களில் திறந்து விடப்படுகிறது. இந்நிலையில், ஏரியின் 7வது மதகு நீண்ட நாட்களாக அடைப்பு ஏற்பட்டு இருந்தது. இதனால், மதகை திறந்தும் போதுமான அளவு தண்ணீர் வெளியேறாமல், சிறிய அளவிலான தண்ணீரே வெளியேறி வந்தது. இது குறித்து, விவசாயிகள் நீர்வளத் துறையினருக்கு புகார் அளித்து இருந்தனர். உத்திரமேரூர் நீர்வளத் துறையினர் அடைப்பு ஏற்பட்டுள்ள, 7வது மதகை பொக்லைன் இயந்திரத்தின் மூலமாக, நேற்று சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனர். இதில், நீர்வளத் துறை உதவி செயற்பொறியாளர் மார்கண்டன், உதவி பொறியாளர் கண்ணன் உட்பட பலர் உடனிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ