உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / சந்தன காப்பு அலங்காரத்தில் நசரத்பேட்டை வேலாத்தம்மன்

சந்தன காப்பு அலங்காரத்தில் நசரத்பேட்டை வேலாத்தம்மன்

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் நசரத்பேட்டை வேலாத்தம்மன், சந்தன காப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார். காஞ்சிபுரம் நசரத்பேட்டை வேலாத்தம்மன் மற்றும் புவனகிரி அம்மன் கோவிலில், கடந்த 20ம் தேதி பந்தகால் முகூர்த்தத்துடன் கூழ்வார்த்தல் விழா துவங்கியது. இதில், நான்காம் நாள் விழாவான நேற்று, காலை 7:00 மணிக்கு புவனகிரி அம்மன், வேலாத்தம்மனுக்கு சந்தன காப்பில் அபிஷேக அலங்காரம் நடந்தது. பிற்பகல் 12:00 மணிக்கு கன்னிகோவில் குளத்தின் குளக்கரையில் அம்மன் பூங்கரகம் நடந்தது. தொடர்ந்து கோவில் வளாகத்தில் கூழ்வார்க்கப்பட்டது. மாலை 3:00 மணிக்கு பொங்கல் வைக்கப்பட்டு அம்மனுக்கு படையலிடப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை