பைப்லைன் விரிசலால் வீணாகும் குடிநீர்
உத்திரமேரூர்:உத்திரமேரூர் ஒன்றியம், திருமுக்கூடல் கிராமத்தில் 2,000க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதி மக்களுக்கு மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் இருந்து, பைப்லைன் வாயிலாக குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில், நடுத்தெருவில் பூமிக்கு அடியில் புதைக்கப்பட்டுள்ள பைப்லைன் உடைந்து, ஒரு மாதத்திற்கும் மேலாக குடிநீர் வீணாகி வருகிறது. அவ்வாறு செல்லும் நீரானது சாலையில் உள்ள பள்ளத்தில் குளம்போல் தேங்கி வருகிறது. இதனால், அவ்வழியே செல்லும் வாகன ஓட்டிகள் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். தொடர்ந்து, நீரானது வெளியேறி வருவதால் அப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே, உடைந்த பைப்லைனை சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.