மேலும் செய்திகள்
பழையசீவரம் சாலையோரம் அகற்றப்படாத ஆக்கிரமிப்புகள்
02-Nov-2024
வாலாஜாபாத்:வாலாஜாபாத் ஒன்றியத்திற்கு உட்பட்டது உள்ளாவூர் கிராமம். இக்கிராம குடிநீர் தேவைக்கு பழையசீவரம் பாலாற்று படுகையில், ஆழ்துளை கிணறு அமைக்கப்பட்டு உள்ளது.ஆழ்துளை கிணறு வாயிலாக உறிஞ்சப்படும் தண்ணீர், நிலத்திற்கு அடியில் புதைக்கப்பட்ட குடிநீர் குழாய் வழியாக உள்ளாவூர் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் ஏற்றி, அதன் வாயிலாக, அப்பகுதி வீட்டு குழாய்களில் குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது.இந்நிலையில், பழையசீவரம் பாலாற்றில் இருந்து, உள்ளாவூர் சென்றடையும் நிலத்தடியில் புதைக்கப்பட்ட குடிநீர் குழாய், சாலையோர பாலாற்றங்கரை பகுதியில் உடைப்பு ஏற்பட்டு, கசிந்து வெளியேறி வருகிறது.இதனால், அப்பகுதியில் ஏற்பட்டுள்ள குடிநீர் உடைப்பை சீர் செய்து, குடிநீர் வீணாவதை தடுக்க சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
02-Nov-2024