உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / மேல்பாக்கம் அரசு பள்ளியில் குடிநீர் மணி திட்டம் துவக்கம்

மேல்பாக்கம் அரசு பள்ளியில் குடிநீர் மணி திட்டம் துவக்கம்

உத்திரமேரூர்:மேல்பாக்கம் அரசு பள்ளியில், 'குடிநீர் மணி திட்டம்' நேற்று துவக்கப்பட்டது.தமிழகத்தில் உள்ள தொடக்கப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு, பள்ளி கல்வித் துறை சார்பில், 'குடிநீர் மணி திட்டம்' நேற்று சென்னையில் அறிமுகப்படுத்தப்பட்டது.அதன்படி, 1 முதல் 5ம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் தினமும் மூன்று வேலை தண்ணீர் அருந்த திட்டமிடப்பட்டுள்ளது. அதில், காலை 11:00 மணிக்கும், மதியம் 1:00 மணிக்கும், மாலை 3:00 மணிக்கும், 'குடிநீர் மணி' அடிக்கப்படும்போது, மாணவர்கள் தண்ணீர் அருந்த வேண்டும்.அவ்வாறு மாணவர்கள் தண்ணீர் அருந்தும்போது, கவனச்செறிவு மற்றும் கவனகுவிப்பை மேம்படுத்துகிறது. மேலும், நினைவாற்றல் மற்றும் அறிவாற்றல் செயல்பாட்டை மேம்படுத்துகிறது.இந்நிலையில், காஞ்சிபுரம் மாவட்டம், உத்திரமேரூர் ஒன்றியம், மேல்பாக்கம் ஊராட்சியில் உள்ள ஒன்றிய தொடக்கப் பள்ளியில், 'குடிநீர் மணி திட்டம்' நேற்று செயல்படுத்தப்பட்டது.இந்நிகழ்ச்சிக்கு பள்ளி தலைமையாசிரியர் சரளா தலைமை தாங்கினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை