உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / சத்துக்கள் நிறைந்தது தர்ப்பூசணி பழம் அச்சமின்றி சாப்பிடலாம்: துணை இயக்குனர்

சத்துக்கள் நிறைந்தது தர்ப்பூசணி பழம் அச்சமின்றி சாப்பிடலாம்: துணை இயக்குனர்

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் மாவட்டத்தில், 405 ஏக்கர் பரப்பளவில் தர்ப்பூசணி பழம் சாகுபடி செய்யப்படுகிறது. ஒரு ஏக்கருக்கு, 10 டன் வரையில் விளைச்சல் கொடுக்கிறது. குறிப்பாக, கோடைக்கு முன்னதாக சாகுபடி செய்து, மார்ச், ஏப்ரல், மே ஆகிய மாதங்களில் அறுவடைக்கு செய்து, விவசாயிகள் விற்பனை செய்கின்றனர்.சமூக வலை தளங்களில், தர்ப்பூசணி பழத்தில் கலப்படம் செய்வதாக வதந்தி பரவியது. இதை தொடர்ந்து, தோட்டக்கலை உற்பத்தி ஆணையர் உள்ளிட்ட பல்வேறு நிலை அதிகாரிகள் கள ஆய்வு செய்து கலப்படம் ஏதுவும் இல்லை என, உறுதியளித்துள்ளனர்.தக்காளி, சிவப்பு நிற கொய்யா, திராட்சை பழங்களை போலவே, தர்ப்பூசணி பழங்களில், ‛லைக்கோபீன்' என்னும் சிவப்பு நிறம் இயற்கையாகவே இருப்பதால், இனிப்பு மற்றும் நிறம் குறித்து, எவ்வித அச்சமும் இன்றி தர்ப்பூசணி பழத்தை பொது மக்கள் வாங்கி சாப்பிடலாம்.இதுதவிர, கேரட், சர்க்கரைவள்ளிக்கிழங்கு, குடைமிளகாய் ஆகிய காய்கறிகளிலும்,‛லைகோபீன் மற்றும் பீட்டா கரோட்டீன் சத்துக்கள் உள்ளன. எனவே, அனைத்து சத்துக்கள் நிறைந்த தர்ப்பூசணி பழத்தை வாங்கி சாப்பிடலாம் என, காஞ்சிபுரம் மாவட்ட தோட்டக்கலை துணை இயக்குனர் லட்சுமி அறிக்கையில் தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை