கீழ்கதிர்பூரில் மழைநீர் கால்வாய் துார்வாரி சீரமைப்பது எப்போது?
காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் ஒன்றியம் கீழ்கதிர்பூரில் நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பில் கட்டப்பட்ட, 2,112 அடுக்குமாடி குடியிருப்பு வீடுகள் உள்ளன. இங்குள்ள தெருக்களில் மழைநீர் வெளியேறும் வகையில் அனைத்து தெருக்களிலும் மழைநீர் வடிகால்வாய் அமைக்கப்பட்டுள்ளது.இந்த மழைநீர், குடியிருப்பை ஒட்டியுள்ள காலிமனையில் வெளியேறும் வகையில் அமைக்கப்பட்டுள்ள கால்வாயில் பிளாஸ்டிக் பாட்டில்கள் உள்ளிட்ட குப்பை கழிவுகளால் அடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனால், பலத்த மழை பெய்தால், கால்வாய் வாயிலாக வெளியேற வேண்டிய மழைநீர் குடியிருப்புகளை சூழும் நிலை உள்ளது.எனவே, கீழ்கதிர்பூர் அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள மழைநீர் வடிகால்வாயில் குவிந்துள்ள குப்பை கழிவுகளை துார்வாரி சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.