உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / பாலாற்று நீர்வரத்து கால்வாயில் ஆக்கிரமிப்பு அகற்றுவது எப்போது?

பாலாற்று நீர்வரத்து கால்வாயில் ஆக்கிரமிப்பு அகற்றுவது எப்போது?

உத்திரமேரூர்:உத்திரமேரூர் ஒன்றியம் பினாயூர் பாலாற்றில் இருந்து, களியப்பேட்டை மற்றும் விச்சூர் கிராம ஏரிகளுக்கு சாத்தணஞ்சேரி வழியாக நீரவரத்து கால்வாய் செல்கிறது.இக்கால்வாயை ஒட்டியுள்ள விவசாய நிலங்களில், பினாயூர் மற்றும் சாத்தணஞ்சேரி கிராமத்தைச் சேர்ந்த விவசாயிகள் சிலர் நெல், கரும்பு போன்ற பயிர்கள் சாகுபடி செய்கின்றனர். இவ்வாறு பயிரிடும் விவசாயிகளில் சிலர், கடந்த ஆண்டுகளில் பாலாற்று கால்வாயை தூர்த்து, தங்கள் நிலங்களோடு சமன்செய்துள்ளனர்.குறிப்பாக சாத்தணஞ்சேரியைச் சேர்ந்த பல விவசாயிகள், ஆங்காங்கே கால்வாயை தூர்த்து, தங்கள் நிலங்களுக்கு மாட்டு வண்டி, டிராக்டர் போன்ற வாகனங்கள் செல்ல ஏதுவாக பாதை வசதி ஏற்படுத்தி உள்ளனர்.இதனால், மழைக்காலங்களில், பாலாற்றில் இருந்து, களியப்பேட்டை மற்றும் விச்சூர் ஏரிக்கு தண்ணீர் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.எனவே, இக்கால்வாய் ஆக்கிரமிப்புகளை அகற்றி, கால்வாயை தூர்வார உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, விச்சூர் மற்றும் களியப்பேட்டை விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி