மழைநீர் கால்வாய் படுமோசம் துார்வாரி சீரமைப்பது எப்போது?
காஞ்சிபுரம், காஞ்சிபுரம் மாநகராட்சி, பிள்ளையார்பாளையம் அண்ணா நுாற்றாண்டு நினைவு பூங்கா அமைந்துள்ள சாலையில், அப்பகுதியில் பெய்யும் மழைநீர் வெளியேறும் வகையில், சாலையோரம் வடிகால்வாய் அமைக்கப்பட்டுள்ளது.இக்கால்வாயை மாநக ராட்சி நிர்வாகம் முறையாக பராமரிக்காததால், கால்வாயில் மண்திட்டுகளாலும்,கட்டட இடிபாடு கழிவுகளாலும் அடைப்பு ஏற்பட்டு துார்ந்த நிலையில் உள்ளது. இதனால், மழைநீர் வெளியேறுவதில் சிக்கல் ஏற்படும் சூழல் உள்ளது.எனவே, மழைநீர் கால்வாயை துார்வாரி சீரமைக்க, மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.