உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / அங்கான்வாடி மையம் வைப்பூரில் அமைக்கப்படுமா?

அங்கான்வாடி மையம் வைப்பூரில் அமைக்கப்படுமா?

ஸ்ரீபெரும்புதுார்:குன்றத்துார் ஒன்றியம், வைப்பூர் கிராமத்தில் 250க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இங்கு, பிறந்த குழந்தை முதல் 5 வயதிற்குட்பட்ட 30 க்கும் அதிகமான குழந்தைகள் உள்ளனர்.இங்கு, 20 ஆண்டுகளுக்கு முன் வாடகை கட்டடத்தில் அங்கன்வாடி மையம் செயல்பட்டு வந்தது. அதன் பின், போதிய மாணவர்கள் இல்லாததால், அங்கன்வாடி மூடப்பட்டது.தற்போது அங்கன்வாடி மையம் இல்லை. இதனால், குழந்தைகளுக்கு தேவையான ஊட்டச்சத்து மற்றும் ஆரம்ப கல்வி பெறுவதில் குறைபாடு ஏற்பட்டுள்ளது.மேலும், கர்ப்பிணியர் மற்றும் பாலுாட்டும் பெண்கள் அங்கன்வாடி மையத்தில் வழங்கப்படும் இணை உணவு பெற சிரமப்படுகின்றனர்.எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்து, வைப்பூர் பகுதியில் நவீன வசதிகளுடன் புதிய அங்கன்வாடி மையம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டு என, அப்பகுதியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை