உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / கைவிடப்பட்ட வி.ஏ.ஒ., அலுவலக கட்டடம் இடித்து அகற்றப்படுமா?

கைவிடப்பட்ட வி.ஏ.ஒ., அலுவலக கட்டடம் இடித்து அகற்றப்படுமா?

வாலாஜாபாத், வாலாஜாபாத்தில், கைவிடப்பட்ட பழைய வி.ஏ.ஒ., அலுவலக கட்டடத்தில், விஷ ஜந்துக்கள் நடமாட்டம் அதிகரித்து வருவதால் மக்கள் அச்சத்தில் உள்ளனர்.வாலாஜாபாத் பேரூராட்சி, 10வது வார்டில், கோபால் நாயுடுத் தெரு உள்ளது. இத்தெருவில் செயல்பட்டு வந்த வி.ஏ.ஒ., அலுவலக கட்டடம் மிகவும் பழுதடைந்ததை அடுத்து பயன்பாட்டிற்கு லாய்கற்றதாக கைவிடப்பட்டது.இதையடுத்து, பழுதான கட்டடத்தின் அருகாமையில் புதிய கட்டட வசதி ஏற்படுத்தப்பட்டு தற்போது வி.ஏ.ஒ., அலுவலகம் இயங்குகிறது.இந்நிலையில், வி.ஏ.ஒ., அலுவலகம் இயங்கிய கைவிடப்பட்ட பழைய கட்டடத்தை சுற்றி செடி, கொடிகள் மற்றும் முள் மரங்கள் வளர்ந்துள்ளன. இதனால், இக்கட்டடம் பாம்பு, தேள் உள்ளிட்ட விஷ ஜந்துக்கள் குடியிருப்புக்கான புகலிடமாக உள்ளது.மேலும், இக்கட்டடத்தை சுற்றி குடியிருப்புகள் உள்ளதால் மழைக்காலத்தில் கட்டடம் இடிந்து ஆபத்து ஏற்படக்கூடும் என, அப்பகுதி மக்கள் இடையே அச்சம் உள்ளது.எனவே, வாலாஜாபாத், கோபால் நாயுடு தெருவில் விஷ ஜந்துக்கள் புகலிடமாக மாறி வரும் கைவிடப்பட்ட பழைய வி.ஏ.ஒ., அலுவலக கட்டடத்தை இடித்து அப்புறப்படுத்த வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை