உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / காஞ்சிபுரம் புதிய ரயில் நிலையத்தில் முன்பதிவு மையம் முழு நாளும் இயங்குமா?

காஞ்சிபுரம் புதிய ரயில் நிலையத்தில் முன்பதிவு மையம் முழு நாளும் இயங்குமா?

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் பொன்னேரிக்கரையில், கணினி முன்பதிவு மையத்துடன், புதிய ரயில் நிலையம் இயங்கி வருகிறது. தொலைதுாரம் செல்லும் ரயிலில் பயணிக்க, இங்கு தினமும் நுாற்றுக்கணக்கானோர் டிக்கெட் முன்பதிவு செய்கின்றனர்.'கொரோனா' ஊரடங்குக்கு முன், தினமும் காலை 8:00 மணி முதல் மதியம் 2:00 மணி வரையிலும், மதியம் 2:15 மணி முதல் இரவு 8:00 மணி என, நாள் முழுதும், முன்பதிவு மையம் இயங்கி வந்தது.இந்நிலையில், 2020ல் 'கொரோனா' ஊரடங்கின்போது, முழுமையாக மூடப்பட்ட ரயில் டிக்கெட் முன்பதிவு மையம், ஊரடங்கில் பல்வேறு தளர்வு ஏற்பட்டபின், காலை 8:00 மணி முதல் மதியம் 2:00 மணி வரை என, அரை நாள் மட்டுமே செயல்பட்டு வருகிறது.தற்போது, முற்றிலும் இயல்பு நிலை திரும்பி, ஒராண்டுக்கு மேலாகியும், ரயில் முன்பதிவு மையம் அரை நாள் மட்டுமே இயங்கி வருகிறது.இதனால், மதியத்திற்கு மேல், ரயில் டிக்கெட் முன்பதிவு செய்ய வருவோர், ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்கின்றனர்.எனவே, 'கொரோனா'வுக்கு முன் இருந்தது போன்று, காலை 8:00 மணி முதல் இரவு 8:00 மணி வரை என, நாள் முழுதும் ரயில் டிக்கெட் முன்பதிவு மையம் இயங்க, ரயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பயணியர் வலியுறுத்தி உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை