உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / பாசி படர்ந்து புற்கள் வளர்ந்துள்ள நல்லதண்ணீர்குளம் சீரமைக்கப்படுமா?

பாசி படர்ந்து புற்கள் வளர்ந்துள்ள நல்லதண்ணீர்குளம் சீரமைக்கப்படுமா?

உத்திரமேரூர்:உத்திரமேரூர் நல்லதண்ணீர்குளம் பாசி படர்ந்து கோரை புற்கள் வளர்ந்துள்ளதால், சீரமைக்க வேண்டும் என, அப்பகுதி மக்கள் எதிர்பார்க்கின்றனர். உத்திரமேரூர் பேரூராட்சியில் உள்ள நல்லதண்ணீர்குளம், அப்பகுதியின் முக்கிய நிலத்தடி நீர் ஆதாரமாக உள்ளது. இதன் தண்ணீரை, 40 ஆண்டுக்கு முன், அப்பகுதி மக்கள் குடிநீராக பயன்படுத்தி வந்தனர். தற்போது, இந்த குளம் முறையாக பராமரிப்பு இல்லாமல் உள்ளது. குளத்தில் கோரை புற்கள் வளர்ந்து, தண்ணீர் பாசி படர்ந்து உள்ளது. குளத்தின் கரையோரத்தில் கருவேல மரங்கள் வளர்ந்து வருகின்றன. குளம் செடிகளால் சூழ்ந்து இருப்பதால், அதிலிருந்து பாம்பு உள்ளிட்ட விஷஜந்துக்கள் அருகிலுள்ள குடியிருப்புகளுக்குள் வருகின்றன. இதனால், அப்பகுதி மக்கள் அச்சத்தில் வாழ்ந்து வருகின்றனர். எனவே, நல்லதண்ணீர்குளத்தை சீரமைக்க, அப்பகுதி மக்கள் எதிர்பார்க்கின்றனர். இது குறித்து பேரூராட்சி அதிகாரி ஒருவர் கூறுகையில், ''நல்லதண்ணீர்குளம் முக்கிய நிலத்தடி நீர் ஆதாரமாக உள்ளது. இந்த குளத்தை சீரமைத்து மீண்டும் தண்ணீரை குடிப்பதற்கு பயன்படுத்த உரிய நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !