உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / மாட்டு தொழுவமாக மாறிய மகளிர் திட்ட மேலாண் அலுவலகம்

மாட்டு தொழுவமாக மாறிய மகளிர் திட்ட மேலாண் அலுவலகம்

உத்திரமேரூர், வட்டார மகளிர் திட்ட மேலாண்மை அலுவலகம் முன் மாடுகள் கட்டுவதால், தொழுவமாக மாறி வருகிறது. இதை தடுக்க, துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர். உத்திரமேரூர் ஒன்றியம், சிறுங்கோழி கிராமத்தில், வட்டார மகளிர் திட்ட மேலாண்மை அலுவலகம் இயங்கி வருகிறது. இந்த அலுவலகத்தில், உத்திரமேரூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட ஏழை பெண்களை சுய உதவி குழுக்களில் சேர்த்து, திறன் மேம்பாட்டு பயிற்சிகள் அளித்து, கடனுதவி வழங்குவது உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இங்கு, சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த பெண்கள் பல்வேறு பணிகளுக்காக தினமும் வந்து செல்கின்றனர். சமீப நாட்களாக, வட்டார மகளிர் திட்ட மேலாண்மை அலுவலகம் முன், அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் மாடுகளை கட்டி வருகின்றனர். இதனால், அது மாட்டு தொழுவமாக மாறி வருகிறது. இதனால், அலுவலகத்திற்கு வருவோருக்கு இடையூறு ஏற்பட்டு வருகிறது. எனவே, வட்டார மகளிர் திட்ட மேலாண்மை அலுவலகம் முன், மாடுகள் கட்டுவதை தடுக்க, துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை