உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / வாகனம் மோதி இளம் பெண் உயிரிழப்பு

வாகனம் மோதி இளம் பெண் உயிரிழப்பு

ஸ்ரீபெரும்புதுார்: ஸ்ரீபெரும்புதுாரில் அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில், சாலையை கடக்க முயன்ற இளம் பெண் உயிரிழந்தார். ஸ்ரீபெரும்புதுார் அடுத்த, மொளச்சூர் கிராமத்தைச் சேர்ந்தவர் பொன்னியம்மன், 23. ஸ்ரீபெரும்புதுாரில் உள்ள 'சால்காம்' தனியார் தொழிற்சாலையில் வேலை செய்து வந்தார். நேற்று, காலை வேலைக்கு செல்வதற்காக, ஸ்ரீபெரும்புதுார் உயர்நிலைப் பள்ளி சந்திப்பு பேருந்து நிறுத்தத்தில் வந்து இறங்கினார். ஒரகடம் செல்லும் சாலையில் உள்ள தொழிற்சாலைக்கு செல்வதற்கு, சென்னை -- பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையை கடக்க முயன்றார். அப்போது, காஞ்சி புரத்தில் இருந்து சென்னை நோக்கி சென்ற அடை யாளம் தெரியாத வாகனம் மோதியதில், பொன்னியம்மன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். ஸ்ரீபெரும்புதுார் போலீசார் உடலை மீட்டு, பிரேத பரி சோதனைக்காக ஸ்ரீபெரும்புதுார் அரசு மருத்துமனைக்கு அனுப்பி வைத்தனர். சென்னை -- பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில், ஸ்ரீபெரும்புதுார் உயர்நிலைப் பள்ளி பகுதி, முக்கிய சந்திப்பாக உள்ளது. இங்கு, அடிக்கடி விபத்து ஏற்பட்டு வருகிறது. இருந்தும் இப்பகுதியில் கண்காணிப்பு கேமரா இல்லை. இதனால், விபத்து ஏற்படும் போது, வாகனங்களை கண்டறிவதில் போலீசாருக்கு சிக்கல் ஏற்பட்டு உள்ளது. எனவே, இப்பகுதியில், கண்காணிப்பு கேமரா அமைக்க, ஸ்ரீபெரும்புதுார் போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !