உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / சட்டவிரோத மது விற்பனை வாலிபர் கைது

சட்டவிரோத மது விற்பனை வாலிபர் கைது

கோவிலம்பாக்கம்: பல்லாவரம்- - துரைப்பாக்கம் ரேடியல் சாலை, கோவிலம்பாக்கம் சிக்னல் அருகே செயல்பட்டு வரும் மதுபான கூடத்தில் சட்டவிரோதமாக மது விற்பனை நடக்கிறது. இங்கு, அரசு அனுமதித்த நேரத்தை மீறி, சட்டவிரோதமாக, 24 மணி நேரமும் மது விற்பனையில் ஈடுபடுவது குறித்து, மேடவாக்கம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்படி, அங்கு சென்ற போலீசார், சட்டவிரோதமாக மது பாட்டில் விற்ற, புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த ராம்குமார், 35, என்பவரை கைது செய்து, அவரிடமிருந்து 13 குவார்ட்டர் பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை