உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / மரத்தில் டூ - வீலர் மோதி வாலிபர் உயிரிழப்பு

மரத்தில் டூ - வீலர் மோதி வாலிபர் உயிரிழப்பு

உத்திரமேரூர்:குண்ணவாக்கத்தில் சாலையோர மரத்தில் டூ - வீலர் மோதிய விபத்தில் வாலிபர் ஒருவர் உயிரிழந்தார். உத்திரமேரூர் தாலுகா, வாடாதவூர் கிராமத்தைச் சேர்ந்தவர் தினேஷ், 29; இவர், நேற்று இரவு 7:30 மணிக்கு நண்பர்களான அழிசூரைச் சேர்ந்த ஜானகிராமன், 32 ; ஆண்டித்தாங்கலைச் சேர்ந்த குணசேகரன், 30, ஆகியோருடன், சாலவாக்கத்தில் இருந்து வாடாதவூருக்கு, 'பஜாஜ் பிளாடினா' டூ - வீலரில் சென்றார். குண்ணவாக்கம் கூட்டுச்சாலை பகுதியில் செல்லும்போது, டூ - வீலர் நிலைத் தடுமாறி சாலையோர மரத்தில் மோதி விபத்தில் சிக்கியது. அதில், டூ - வீலரை ஓட்டிச் சென்ற தினேஷ் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பின்னால் அமர்ந்து சென்று காயமடைந்த ஜானகிராமன், குணசேகரன் ஆகிய இருவரும், செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். உத்திரமேரூர் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி