உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கன்னியாகுமரி / ஏ.டி.எம்., கதவு உடைப்பு: கைது 2

ஏ.டி.எம்., கதவு உடைப்பு: கைது 2

நாகர்கோவில்:கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை அருகே முளகுமூட்டில் தேசிய மயமாக்கப்பட்ட வங்கி உள்ளது. வங்கியுடன் சேர்ந்து ஏ.டி.எம். மையமும் உள்ளது. நேற்று காலை ஏ.டி.எம். கதவு உடைக்கப்பட்டுள்ளதை கண்ட அப்பகுதி மக்கள் வங்கி மேலாளருக்கு தகவல் கொடுத்தனர். போலீசார் விசாரணை நடத்தினர். ஏ.டி.எம். அறைக்குள் வந்த இரண்டு பேர் கதவுகளை உடைப்பது சி.சி.டி.வி.கேமராவில் பதிவாகியிருந்தது. அதன்படி அதே பகுதியைச் சேர்ந்த அகில் 24, பிரதீப் 25 ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்தனர்.இருவரும் மது போதையில் ஏ.டி.எம். -மில் பணம் எடுக்கச் சென்றபோது கதவு தானாக மூடிக்கொண்டுள்ளது. அதை திறக்க முயற்சித்த போது கதவு மீண்டும் மீண்டும் மூடியதால் ஆத்திரமடைந்த இருவரும் கதவை உடைத்ததோடு ஏ.டி.எம். இயந்திரத்தையும் சேதப்படுத்தி உள்ளனர்.குடிபோதையில் நடந்த சம்பவமா, கொள்ளை முயற்சியா என போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ