மேலும் செய்திகள்
போலி பணி நியமன ஆணை வழங்கி ரூ. 15 லட்சம் மோசடி
24-Sep-2025 | 1
காய்ச்சலால் பாதிக்கப்பட்ட கல்லுாரி மாணவி இறப்பு
20-Sep-2025
நாகர்கோவில்:மார்த்தாண்டம் அருகே ஒருவழிப்பாதையில் வாகனத்தை நிறுத்தி அதை விசாரிக்கச் சென்ற எஸ். ஐ. , மீது தாக்குதல் நடத்தியதாக பா.ஜ., கவுன்சிலர், தி.மு.க. வட்ட செயலாளர் உட்பட மூவரை போலீசார் கைது செய்தனர்.நாகர்கோவில் வடசேரி சுனில் குமார் 35. இம் மாநகராட்சி 12 வது வார்டு பா.ஜ. கவுன்சிலர். நாகர்கோவில் சுரேஷ் 52. மாநகராட்சி 22 வது வட்ட தி.மு.க. செயலாளர். அதே பகுதி சிவசிதம்பரம் 35. தோவாளையைச் சேர்ந்த டிரைவர் விஸ்வா 44.இவர்கள் நான்கு பேரும் மார்த்தாண்டத்தில் திருமணத்தில் கலந்து கொண்டு விட்டு நாகர்கோவில் தேசிய நெடுஞ்சாலை இடது புறம் பம்மம்பகுதியில் உள்ள மண்டபத்தின் முன் ஒரு வழி பாதையில் காரை நிறுத்தி இருந்தனர். மற்ற வாகனங்கள் செல்ல இடையூறாக இருந்ததால் பிரச்னை ஏற்பட்டது.மார்த்தாண்டம் இன்ஸ்பெக்டர் வேளாங்கண்ணி உதய ரேகா மற்றும் போலீசார் அங்கு வந்து விசாரித்த போது போலீசாரிடமும் அவர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர் . இதையடுத்து அவர்களது வாகனத்தை அப்புறப்படுத்த முயன்ற போது எஸ்.ஐ., பெனடிக்டை தாக்கினர். இதைத்தொடர்ந்து சுனில் குமார், சுரேஷ், சிவசிதம்பரம் ஆகிய மூவரும் கைது செய்யப்பட்டனர். நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். தப்பியோடிய விஷ்வாவை போலீசார் தேடுகின்றனர்.
24-Sep-2025 | 1
20-Sep-2025