உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கன்னியாகுமரி / மாணவியை பலாத்காரம் செய்த மீனவருக்கு 20 ஆண்டு சிறை

மாணவியை பலாத்காரம் செய்த மீனவருக்கு 20 ஆண்டு சிறை

நாகர்கோவில்:14 வயது மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் மீனவருக்கு 20 ஆண்டு சிறை தண்டனை விதித்து நாகர்கோவில் சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்தது.கன்னியாகுமரி மாவட்டம் புதுக்கடை அருகே இனையம் புத்தன்துறையைச் சேர்ந்தவர் சுதன் 32. மீனவரான இவர் 2015 பிப்ரவரியில் இனையம் பகுதியைச் சேர்ந்த 14 வயது மாணவியை பெங்களூருக்கு அழைத்து சென்று லாட்ஜில் அறை எடுத்து பாலியல் பலாத்காரம் செய்தார். 'போக்சோ' சட்டத்தில் புதுக்கடை போலீசார் சுதனை கைது செய்தனர். இந்த வழக்கு விசாரணை நாகர்கோவில் குழந்தைகள் பாலியல் வன்கொடுமை தடுப்பு சட்ட சிறப்பு நீதிமன்றத்தில் நடந்தது. சுதனுக்கு 20 ஆண்டு சிறை தண்டனை, ஆறாயிரம் ரூபாய் அபராதமும் விதித்து நீதிபதி சுந்தரையா தீர்ப்பளித்தார். அபராதம் கட்ட தவறினால் மேலும் ஒரு ஆண்டு சிறை தண்டனை அனுபவிக்க உத்தரவிட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை