மேலும் செய்திகள்
குப்பை தொட்டியாக மாறிய கோவில் கிணறு
09-Aug-2024
நாகர்கோவில்: கன்னியாகுமரி பகவதியம்மன் கோயில் தீர்த்த கிணறு 100 ஆண்டுகளுக்கு பின் திறக்கப்பட்ட நிலையில் அதில் அதிக காணிக்கை, தங்கம், வெள்ளி கிடைக்கும் என நினைத்த அறநிலையத்துறையினர் ஏமாற்றமடைந்தனர்.இக்கோயில் மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன் பரசுராமரால் பிரதிஷ்டை செய்யப்பட்டது. கோயில் உட்பிரகாரத்தில் வடக்கு பக்கம் புனித தீர்த்த கிணறு உள்ளது. இக்கிணறு கடற்கரை அருகே அமைந்தாலும் உப்பு சுவையின்றி நல்ல தண்ணீரை கொண்டது. இந்த தீர்த்த கிணற்றில் இருந்து தினமும் புனித நீரை எடுத்து அம்மனுக்கு அபிஷேகம் செய்வர். மூலஸ்தானம் முன்புள்ள வாடாவிளக்கு மண்டப சுரங்கப்பாதை வழியாக கோயில் மேல் சாந்திகள் இந்த கிணற்றுக்குள் சென்று புனித நீர் எடுப்பர்.இதை சுத்தமாக பாதுகாக்க கிணற்றின் மேல் பகுதி இரும்பு கம்பிவலைகளால் மூடப்பட்டுள்ளது. கிணற்றில் பக்தர்கள் நாணயங்களை கணிக்கையாக போட்டு வருகின்றனர். இவை கிணற்றின் மீதுள்ள கருங்கற்களில் கிடந்தது. கிணற்றை திறந்து நாணயங்களை எடுக்க தேவசம்போர்டு அதிகாரிகள் முடிவு செய்தனர். தங்கம், வெள்ளி போன்றவை கிடைக்கும் என எதிர்பார்த்த நிலையில் சொற்ப அளவிலான நாணயங்களே கிடைத்ததால் அதிகாரிகள் ஏமாற்றமடைந்தனர்.
09-Aug-2024