உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கன்னியாகுமரி / குமரியில் நெல் சாகுபடிக்காக பேச்சிப்பாறை அணை திறப்பு

குமரியில் நெல் சாகுபடிக்காக பேச்சிப்பாறை அணை திறப்பு

நாகர்கோவில்:கன்னியாகுமரியில் கன்னிப்பூ சாகுபடிக்காக பேச்சிப்பாறை அணையில் இருந்து கலெக்டர் ஸ்ரீதர் நேற்று தண்ணீர் திறந்து வைத்தார்.இம்மாவட்டத்தில் நெற்பயிற் முதல் போக சாகுபடி கன்னிப்பூ, இரண்டாம் போக சாகுபடியை கும்பப்பூ என்றும் அழைக்கின்றனர். ஆனி, ஆடி மாதங்களில் நடவு செய்வது கன்னிப்பூ.இதற்காக பேச்சிப்பாறை அணையில் இருந்து நேற்று வினாடிக்கு 850 கன அடி தண்ணீரை கலெக்டர் ஸ்ரீதர் திறந்து வைத்தார். இதில் நீர்வளத்துறை அதிகாரிகள் மற்றும் விவசாய சங்க பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.இந்த தண்ணீர் கோதையாறு, பட்டணம் கால்வாய்களில் விடப்பட்டுள்ளது. எல்லா கால்வாய்களிலும் தண்ணீர் ஷிப்ட் முறையில் திறந்து விடப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். 48 அடி உயரம் கொண்ட பேச்சிப்பாறை அணையின் நீர்மட்டம் நேற்று காலை 45.47 அடியாக இருந்தது. அணைக்கு 264 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. விவசாய பணிகள் தீவிரமடைந்துள்ளது. வயலை சமன் செய்து நடவு பணிக்காக தயாராகி வருகின்றனர்.77 அடி உயரம் கொண்ட பெருஞ்சாணி அணி நீர்மட்டம் நேற்று காலை 61அடியாக இருந்தது. இந்த அணையில் இருந்தும் விரைவில் விவசாயத்துக்காக தண்ணீர் திறந்து விடப்படும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை