மேலும் செய்திகள்
பாலியல் தொல்லை ஆசிரியர் கைது
29-Aug-2024
நாகர்கோவில்:மாணவியரிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக கைதான நாகர்கோவில் கேந்திரிய வித்யாலயா பள்ளி ஆசிரியர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.நாகர்கோவில் அருகே கோணத்தில் மத்திய அரசின் கேந்திரிய வித்யாலயா பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு ராஜஸ்தானைச் சேர்ந்த ராமச்சந்திர சோனி 50, ஓவிய ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இவர் எட்டாம் வகுப்பு மாணவி ஒருவரிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக தலைமை ஆசிரியரிடம் அந்த மாணவி மற்றும் பெற்றோர் புகார் செய்தனர்.விசாரணையின்போது மேலும் பல மாணவிகள் இவர் மீது பாலியல் புகார் தெரிவித்தனர். இதை தொடர்ந்து போக்சோ உள்ளிட்ட நான்கு பிரிவுகளில் வழக்குப்பதிந்த நாகர்கோவில் மகளிர் போலீசார் ராமச்சந்திர சோனியை கைது செய்தனர். இதனால் அவர் நேற்று 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டார்.மேல்விசாரணையில் வகுப்பறையில் அலைபேசி மூலம் மாணவிகளை படம் பிடித்ததும், அவர்களிடம் ஆபாசமாக பேசுவது போன்ற செயல்களில் ஈடுபட்டதும் தெரியவந்துள்ளது. அவரின் அலைபேசி பறிமுதல் செய்யப்பட்டு ஆய்வு செய்யப்படுகிறது.
29-Aug-2024