உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கன்னியாகுமரி / தண்டவாளத்தில் பாறாங்கல் வைத்த வாலிபர் கைது

தண்டவாளத்தில் பாறாங்கல் வைத்த வாலிபர் கைது

நாகர்கோவில்:ஆரல்வாய்மொழி அருகே ரயில் தண்டவாளத்தில் பாறாங்கல் வைத்தவர் ஒரு மாதத்திற்கு பின்னர் கைது செய்யப்பட்டார்.கன்னியாகுமரி மாவட்டம் ஆரல்வாய்மொழி ரயில் நிலையம் அருகே செப். 2 ல் தண்டவாளத்தில் பாறாங்கல் வைக்கப்பட்டிருந்தது. அப்போது அவ்வழியாக வந்த ரயில் லோகோ பைலட் சரியான நேரத்தில் கவனித்ததால் விபத்து தவிர்க்கப்பட்டது. இது தொடர்பாக ரயில்வே போலீசார் விசாரித்தனர். ஆரல்வாய்மொழி மருத்துவர் காலனியைச் சேர்ந்த கருப்பசாமி 26 , என்பவர் தண்டவாளத்தில் பாறாங்கல் வைத்தது தெரியவந்தது. போலீசார் அவரை பிடித்து விசாரித்ததில் மதுபோதையில் அவ்வாறு செய்ததாக தெரிவித்தார். அவர் கைது செய்யப்பட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை