உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கன்னியாகுமரி / காய்ச்சலால் பாதிக்கப்பட்ட கல்லுாரி மாணவி இறப்பு

காய்ச்சலால் பாதிக்கப்பட்ட கல்லுாரி மாணவி இறப்பு

நாகர்கோவில்,:கன்னியாகுமரியில் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட ஓமியோபதி கல்லுாரி மாணவி இறந்தது குறித்து சுகாதாரத்துறை அதிகாரிகள் விசாரிக்கின்றனர். கன்னியாகுமரி மாவட்டம் சுசீந்திரம் அருகே பள்ளம் மேகானிம் நகர் பகுதியைச் சேர்ந்தவர் இருதய ஜான் 54. கன்னியாகுமரி அரசு போக்குவரத்து கழகத்தில் மெக்கானிக் ஆக உள்ளார். இவரது மகள் ஜினி தெரசா 22: திருவட்டார் அருகே உள்ள ஓமியோபதி கல்லுாரியில் நான்காம் ஆண்டு படித்து வந்தார். செப். 15 ல் இவருக்கு காய்ச்சல் ஏற்பட்டதால் அப்பகுதி தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உடல்நிலை மோசமடைந்ததால் ஆசாரிப்பள்ளம் மருத்துவ கல்லுாரி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் அவர் இறந்துவிட்டதாக தெரிவித்தனர். என்னவகை காய்ச்சால் இறந்தார் என சுகாதாரத் அதிகாரிகள், சுசீந்திரம் போலீசார் விசாரித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை