மேலும் செய்திகள்
தாராபுரத்தில் சாரல் மழை
26-Jun-2025
அரூரில் சாரல் மழை
03-Jul-2025
நாகர்கோவில்:கன்னியாகுமரி மாவட்டத்தில் நேற்று சாரல் மழையுடன் சூறாவளி வீசியது. இதில் ஏராளமான வாழைகள் சரிந்து சேதமடைந்ததுடன் மீன்பிடித் தொழில் பாதிக்கப்பட்டது.ஆடி முதல் தேதியான நேற்று கன்னியாகுமரி மாவட்டத்தில் சூறாவளி வீசியது. ஏராளமான வாழைகள் மண்ணில் சரிந்து நாசமானது. லேசான சாரல் மழை பெய்தது.காற்றின் வேகம் அதிகமாக இருந்ததால் மாவட்டத்தில் மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை. சின்ன முட்டம் துறைமுகத்திலிருந்து மீன்பிடி தொழிலில் ஈடுபட்ட 350க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் நங்கூரமிட்டு நிறுத்தப்பட்டது. மறு அறிவிப்பு வரும் வரை கடலுக்கு செல்ல வேண்டாம் என்று மீன்வளத் துறை சார்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
26-Jun-2025
03-Jul-2025