உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கன்னியாகுமரி / சிறுமிக்கு பாலியல் தொல்லை போக்சோவில் டிரைவர் கைது

சிறுமிக்கு பாலியல் தொல்லை போக்சோவில் டிரைவர் கைது

நாகர்கோவில் : கன்னியாகுமரி மாவட்டம் கொல்லங்கோடு அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்த 14 வயது சிறுமி ஒன்பதாம் வகுப்பு படிக்கிறார். தந்தை வெளிநாட்டில் வேலை பார்க்கிறார். ஜன.,8-ல் கோயில் திருவிழாவை ஒட்டி பக்கத்து வீட்டை சேர்ந்த தாத்தா முறை கொண்ட டிரைவர் நாகேந்திரன் 51, சிறுமியை புதிய துணி வாங்கித் தருவதாக கூறி அழைத்துச் சென்றுள்ளார். தாயும் நாகேந்திரனுடன் மகளை அனுப்பி வைத்தார்.தாய் வெளியே சென்று விட்டு வீட்டுக்கு திரும்பிய போது மகள் அழுது கொண்டிருந்தார். பைக்கில் அழைத்துச் செல்லும் வழியில் நாகேந்திரன் ஒரு இடத்தில் சிறுமியை பாழடைந்த கட்டிடத்தின் பின்புறம் அழைத்துச் சென்று பாலியல் தொல்லை கொடுத்தது தெரியவந்தது. இதை வெளியில் சொன்னால் கொன்று விடுவதாகவும் மிரட்டல் விடுத்துள்ளார்.தாய் குளச்சல் அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போக்சோ சட்டத்தில் நாகேந்திரனை போலீசார் கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை