உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கன்னியாகுமரி / அம்மாவை தேடி அழுத சிறுவனை கொன்ற டிரைவர் சிறையில் அடைப்பு

அம்மாவை தேடி அழுத சிறுவனை கொன்ற டிரைவர் சிறையில் அடைப்பு

நாகர்கோவில்:கன்னியாகுமரி மாவட்டத்தில், 'அம்மா எங்கே' என்று கேட்டு அடம் பிடித்து அழுத சிறுவனை கொலை செய்ததாக டிரைவர் கைதாகியுள்ளார். கன்னியாகுமரி மாவட்டம் அஞ்சுகிராமம் அருகே குமாரபுரம் தோப்பூர் விவேகானந்தர் தெருவை சேர்ந்தவர் செல்வமதன், 35, டிரைவர். முதல் மனைவியை பிரிந்து வாழ்ந்து வந்த நிலையில், கணவரை பிரிந்த செல்வி என்பவரை திருமணம் செய்திருந்தார். செல்விக்கு ஏற்கனவே அபினவ், 5, என்ற மகன் இருந்தார். செல்வமதனுக்கும், செல்விக்கும் பிறந்த வருண், 1, என்ற மகன் உள் ளார். குடிபோதையில் கணவர் தகராறு செய்ததால், ஒரு மாதத்துக்கு முன் செல்வி மாயமானார். இதுகுறித்து செல்வமதன் அஞ்சுகிராமம் போலீசில் புகார் செய்திருந்தார். இந்நிலையில் கடந்த 31-ம் தேதி இவரது வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசியது. தகவலின் படி, போலீசார் உள்ளே சென்று பார்த்தபோது அபினவ் இறந்து, உடல் அழுகிய நிலையில் காணப்பட்டது. வருண் என்ற குழந்தை, படுகாயங்களுடன் மயங்கிய நிலையில் கிடந்தது. அந்த குழந்தைக்கு, ஆசாரிப்பள்ளம் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது. செல்வ மதனை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது. அமராவதிவிளை என்ற இடத்தில் பதுங்கி இருந்த அவரை போலீசார் கைது செய்தனர். போலீசில் அவர் கொடுத்த வாக்குமூலம்: எனக்கும், செல்விக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. ஒரு மாதத்துக்கு முன் அவர் வீட்டை விட்டு சென்று விட்டார். பல இடங்களில் தேடியும் கிடைக்கவில் லை. இரண்டு குழந்தைகளையும் விட்டுச் சென்றதால் மனவேதனையில் இருந்தேன். குழந்தைகள், 'அம்மா எங்கே' என்று கேட்டு அடம் பிடித்து அழுதன. அவர்களை சரி வர ப ராமரிக்க முடியவில்லை. அம்மா எங்கே என்று கே ட்டு தொந்தரவு செய்ததால் ஏற்பட்ட ஆத்திரத்தில் இருவரையும் அடித்தேன். இதில், அபினவ் மயங்கி விழுந்து இறந்து விட்டான். பின், அங்கிருந்து சென்று விட்டேன். போலீசார் பிடித்து விடுவர் என்பதால் துாத்துக்குடி, கோவையில் தலைமறைவாக இருந்தேன். பணம் தீர்ந்ததால் ஊருக்கு வந்த போது கைது செய்தனர். இவ்வாறு தெரிவித்தார். செல்வ மதனை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போலீசார் சிறையில் அடைத்தனர். அதன் பிறகே அபிநவ் உடலை உறவினர்கள் பெற்று, அடக்கம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ