உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கன்னியாகுமரி / டி.வி.ஆர்., நினைவு சொற்பொழிவு

டி.வி.ஆர்., நினைவு சொற்பொழிவு

நாகர்கோவில்:'தினமலர்' நிறுவனர் டி.வி.ராமசுப்பையர் 14வது ஆண்டு நினைவு சொற்பொழிவு, நாகர்கோவில் ஸ்காட் கிறிஸ்தவ கல்லுாரியில் நடந்தது. கல்லுாரி முன்னாள் மாணவர் சங்கம் சார்பில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு, கல்லுாரி முதல்வர் பொறுப்பு ஹென்றி ராஜா தலைமை வகித்தார். வரலாற்று துறை துணைப் பேராசிரியை என்.அமுத குமாரி வரவேற்றார். முன்னாள் மாணவர் சங்கர், கல்லுாரி முன்னாள் முதல்வர் ஜேம்ஸ் ஆர் டேனியல் அறிமுக உரையாற்றினர்.'நீதிக்கட்சியின் சமூக நீதி' என்ற தலைப்பில்சிறப்பு விருந்தினர் ஹரூர் அரசு கல்லுாரி முன்னாள் முதல்வர் வெங்கடேசன் பேசினார். கல்லுாரி வரலாற்று துறை உதவிப் பேராசிரியர் ஜோயல் நன்றி கூறினார்.இதையொட்டி நடைபெற்ற ஆய்வு கட்டுரை போட்டியில், ஆராய்ச்சி மாணவர்கள் டெனிஷியஸ் ஆக்சலின் முதல் பரிசையும், ராஜேஷ் இரண்டாம் பரிசையும், லட்சுமிபுரம் கல்லுாரி முதுகலை முதலாம் ஆண்டு மாணவி உன்னி மாயா மூன்றாம் பரிசையும் வென்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை