மேலும் செய்திகள்
மனைவி தற்கொலை; கணவனுக்கு 5 ஆண்டு சிறை
20-Sep-2024
நாகர்கோவில்:வரதட்சணை கொடுமையால் மனைவி தற்கொலை செய்த வழக்கில் கணவர் மற்றும் மாமனாருக்கு ஏழு ஆண்டு சிறை தண்டனை விதித்து நாகர்கோவில் மகிளா நீதிமன்றம் தீர்ப்பளித்தது.கன்னியாகுமரிமாவட்டம் புதுக்கடை அருகே காப்புக்காட்டை சேர்ந்தவர் சுரேஷ் மனைவி மினிமோள் 28. இவர் கடந்த 2008-ல் தற்கொலை செய்து கொண்டார். கூடுதல் வரதட்சணை கேட்டு தற்கொலைக்கு துாண்டியதாக கணவர் சுரேஷ், மாமனார் அர்ஜுனன் உட்பட மூன்று பேரை புதுக்கடை போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கு விசாரணை நாகர்கோவில் மகிளா நீதிமன்றத்தில் நடந்தது. இதில் சுரேஷ் மற்றும் அர்ஜுனனுக்கு ஏழு ஆண்டு சிறை தண்டனையும் ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து நீதிபதி சுந்தரையா தீர்ப்பளித்தார்.
20-Sep-2024