உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கன்னியாகுமரி / ஈகோ மோதலில் ஈடுபட்ட இன்ஸ்பெக்டர், எஸ்.ஐ., மாற்றம்

ஈகோ மோதலில் ஈடுபட்ட இன்ஸ்பெக்டர், எஸ்.ஐ., மாற்றம்

நாகர்கோவில்:நாகர்கோவில் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ஈகோ மோதலில் ஈடுபட்ட இன்ஸ்பெக்டர் சாந்தி, எஸ்.ஐ., ஆஷா ஜெபஹர் ஆயுதப்படைக்கு மாற்றப்பட்டனர்.நாகர்கோவில் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் எஸ்.ஐ., ஆக பணிபுரிபவர் ஆஷா ஜெபஹர். இரு மாதங்களுக்கு முன்னர் கோட்டார் காவல் நிலையத்திலிருந்து சிறப்பு எஸ்.ஐ., சங்கர லதா அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு மாற்றப்பட்டார். இவர்களுக்கிடையே பனிப்போர் நிலவி வந்தது. சில நேரங்களில் தன்னை எஸ்.ஐ., என அறிமுகப்படுத்தி கொண்டு சங்கரலதா புகார் மனு மீது விசாரணை நடத்துவதாகவும், வெளி மாவட்ட பணிக்கு இவரை இன்ஸ்பெக்டர் சாந்தி அனுப்புவதில்லை என்றும், இதுகுறித்து இன்ஸ்பெக்டரிடம் கூறியபோது அவர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும், இதனால் பதவியை ராஜினாமா செய்வதாகவும் கூறி எஸ்.பி.சுந்தரவதனத்திடம் எஸ்.ஐ., ஆஷா ஜெபஹர் மனு அளித்தார்.இதைத்தொடர்ந்து எஸ்.ஐ., ஆஷா ஜெபஹர், இன்ஸ்பெக்டர் சாந்தியை ஆயுதப்படைக்கு மாற்றி எஸ்.பி.,சுந்தரவர்த்தனம் உத்தரவிட்டார்.நாகர்கோவில் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் உள்ள போலீஸ் அதிகாரிகள், போலீசார் இடையே ஈகோ பிரச்னை நிலவி வருவதாக சில போலீசார் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ