உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கன்னியாகுமரி / கன்னியாகுமரியில் கடல் சீற்றம் படகு போக்குவரத்து ரத்து

கன்னியாகுமரியில் கடல் சீற்றம் படகு போக்குவரத்து ரத்து

கன்னியாகுமரி : கன்னியாகுமரி கடலில் ஏற்பட்ட கடல் சீற்றம் காரணமாக நேற்று திருவள்ளுவர் சிலைக்கு படகுசேவை நிறுத்தப்பட்டது. கன்னியாகுமரி கடல் பாறையில் அமைக்கப்பட்டுள்ள விவேகானந்தர் மற்றும் திருவள்ளுவர் மண்டபங்களை நேரில் சென்று சுற்றுலா பயணிகள் பார்வையிட்டு செல்கின்றனர். இதற்காக பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழகம் படகு சேவை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் நேற்று கன்னியாகுமரி கடலில் கடல் சீற்றம் அதிகமாக இருந்தது. இதனால் விவேகானந்தார் மண்டபத்திற்கு மட்டும் படகு சேவை நடந்தது. பயணிகள் நலன் கருதி திருவள்ளுவர் சிலைக்கு முழுவதுமாக படகு சேவை நிறுத்தி வைக்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை