ஆபாச வீடியோ வெளியிட்டவர் கைது
நாகர்கோவில்:குமரி மாவட்டம், நாகர்கோவிலைச் சேர்ந்த ஹிந்து மக்கள் கட்சியின் நிர்வாகி ஒருவர், பெண் ஒருவருடன் உல்லாசமாக இருப்பது போன்ற வீடியோ வலைதளங்களில் பரவியது.இதை, அதே கட்சியை சேர்ந்த முன்னாள் நிர்வாகி ரசிப்பது போன்ற காட்சியும் இருந்தது.சம்பந்தப்பட்ட நபர் எஸ்.பி.,யிடம் புகார் செய்தார். சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தியதில், ஈசானசிவம் என்பவர் அந்த வீடியோவை வெளியிட்டது உறுதியானது. அவரை போலீசார் கைது செய்தனர்.இதற்கு அவரது நண்பர் ஒருவர் உதவியுள்ளார். அந்த நபரை பிடிக்கவும் போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.