உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கன்னியாகுமரி /  மோசடி வழக்கில் சிக்கியவர் லேப்டாப்பில் பலான வீடியோ

 மோசடி வழக்கில் சிக்கியவர் லேப்டாப்பில் பலான வீடியோ

நாகர்கோவில்: மோசடி வழக்கில் கைது செய்யப்பட்ட நபரின் லேப்டாப்பில், 'பலான' வீடியோக்கள் இருந்ததால், போலீசார் அவரை விசாரிக்கின்றனர். ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணத்தை சேர்ந்தவர் பிரபாகரன், 37. இவர், கன்னியாகுமரி மாவட்டம், திருப்பதிசாரத்தை சேர்ந்த பெண்ணுக்கு வேலை வாங்கி தருவதாக கூறி, 25 லட்சம் ரூபாய் வாங்கினார். வேலை வாங்கித் தரவில்லை. அந்த பெண், கன்னியாகுமரி எஸ்.பி., ஸ்டாலினிடம் புகார் அளித்தார். ஆரல்வாய்மொழி போலீசார், பிரபாகரனை கைது செய்து விசாரித்தனர். அதில், அவர் சென்னை, அரக்கோணம், மதுரை உள்ளிட்ட இடங்களில் பலரிடமும் வேலை வாங்கி தருவதாக கூறி பண மோசடி செய்தது தெரிந்தது. அவரிடம் இருந்த ஒரு லேப்டாப்பை போலீசார் ஆய்வு செய்ததில், ஏராளமான பெண்களின் ஆபாச வீடியோக்கள் இருந்தன. இந்த வீடியோக்கள், வேலைக்காக பணம் கொடுத்த பெண்களை ஏமாற்றி எடுத்ததா என போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ