உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கன்னியாகுமரி / நகைகள், வாலிபருடன் மாயமான இளம்பெண் நெல்லையில் மீட்பு

நகைகள், வாலிபருடன் மாயமான இளம்பெண் நெல்லையில் மீட்பு

நாகர்கோவில்:கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில் அருகே மருத்துவமனை நடத்தி வரும் டாக்டர் தம்பதியின் வீட்டு வேலைக்காக, தனியார் நிறுவனம் மூலம் திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த, 29 வயது பெண், சமீபத்தில் தேர்வானார். அவர் பணியில் காட்டிய முனைப்பும், அர்ப்பணிப்பும் டாக்டர் தம்பதியை கவர்ந்தது. இதனால் இளம்பெண்ணுக்கு அதிக சம்பளம் கொடுத்தனர்.டாக்டர் தம்பதியின், 19 வயது மகன் உடல்நலம் பாதிக்கப்பட்ட நிலையில் வீட்டில் இருந்தார். அவருக்கும், அந்த பெண்ணுக்கும் தொடர்பு ஏற்பட்டது. இந்நிலையில் டாக்டர் தம்பதியின் மகன் மற்றும் 50 சவரன் நகைகளுடன் இளம்பெண் மாயமானார்.போலீசாரின் விசாரணையில், பல மாநிலங்களுக்கு இருவரும் சென்றது தெரிந்தது. திருநெல்வேலி வந்த அவர்களை போலீசார் சுற்றி வளைத்தனர்.டாக்டர் தம்பதி கேட்டதால், வழக்கு பதியாமல் இளம்பெண்ணை எச்சரித்து அனுப்பிய போலீசார், மகனை அவர்களிடம் ஒப்படைத்தனர். அந்த பெண், இதுபோல நான்கு பேரை ஏமாற்றி திருமணம் செய்துள்ளது, போலீஸ் விசாரணையில் தெரிந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை