உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கன்னியாகுமரி / ரயிலுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவர் கைது

ரயிலுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவர் கைது

நாகர்கோவில்:கேரளாவில் ரயில்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததாக பத்தணந்திட்டா மாவட்டத்தை சேர்ந்தவரை போலீசார் கைது செய்தனர்.கேரள மாநிலம் எர்ணாகுளம் போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு தொலைபேசியில் அழைத்த ஒருவர், எர்ணாகுளத்தில் இருந்து திருவனந்தபுரத்துக்கு செல்லும் ரயிலில் வெடிகுண்டு வைத்துள்ளதாக கூறினார். இதை தொடர்ந்து ரயில்களில் மோப்பநாய் உதவியுடன் சோதனை நடந்தது. வெடிகுண்டு எதுவும் சிக்கவில்லை.தொலைபேசியில் அழைத்தவர் பற்றி சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தியதில் பத்தணம் திட்டா மாவட்டம் ரான்னியைச் சேர்ந்த ஹரிலால் 35 என்பவர் அலைபேசியில் மிரட்டல் விடுத்தது தெரியவந்தது. போலீசார் ஹரிலாலை கைது செய்தனர். குடிபோதையில் மிரட்டல் விடுத்த தாக அவர் கூறியதை முழுமையாக நம்பாத போலீசார் தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி