கேரளாவிலிருந்து கழிவுடன் வந்த லாரி பறிமுதல்
நாகர்கோவில்; கன்னியாகுமரி மாவட்டம், அருமனை அருகே ஆறுகாணி பகுதியில், பன்றி பண்ணைக்கு கேரளாவில் இருந்து இறைச்சி கழிவுகள் வருவதாக தகவல் கிடைத்தது. ஆறுகாணி போலீசார் அப்பகுதியில் சோதனை மேற்கொண்டனர். அவ்வழியே வந்த மினி லாரியில் இறைச்சிக்கழிவுகள் இருந்தன. மினி லாரியை ஓட்டி வந்த டிரைவர், கேரளாவைச் சேர்ந்த ஜெயகுமாரை கைது செய்தனர்.