உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கன்னியாகுமரி / மது தகராறில் கோஷ்டி மோதல் சிறுவன் உட்பட இருவர் கைது

மது தகராறில் கோஷ்டி மோதல் சிறுவன் உட்பட இருவர் கைது

நாகர்கோவில்:கன்னியாகுமரி அருகே சட்டக் கல்லுாரி மாணவர் மது அருந்துவது பற்றி அவரது தந்தையிடம் கூறிய முன்விரோதத்தில் ஏற்பட்ட கோஷ்டி மோதலில் இரண்டு பேர் படுகாயம் அடைந்தனர். இதில் 16 வயது சிறுவன் உட்பட இரண்டு பேரை போலீசார் கைது செய்தனர். கன்னியாகுமரி மாவட்டம் வல்லன்குமார விளை சிதம்பர நாடார் தெருவை சேர்ந்தவர் செல்வகுமார் மகன் பிரவீன் 24. பெங்களூரு சட்டக் கல்லுாரியில் எல்.எல்.பி. படித்து வருகிறார். பிரவீனுக்கு குடிப்பழக்கம் இருப்பதை அவரது தந்தையிடம் மணிக்கட்டி பொட்டலைச் சேர்ந்த கண்ணன் 33, கூறியுள்ளார். இதனால் இருவருக்கும் இடையே முன்விரோதம் ஏற்பட்டது. நேற்று முன்தினம் பிரவீன் மது குடித்துக் கொண்டிருந்தபோது அங்கு வந்த கண்ணன் தனக்கும் வேண்டும் என்று கேட்டு தகராறு செய்து அங்கிருந்து சென்று விட்டார்.இதை தொடர்ந்து பிரவீன், அவரது நண்பர் அரவிந்த் 21, ஆகியோர் அப்பகுதியில் நின்று கொண்டிருந்த போது, கண்ணன் மற்றும் அவரது சகோதரர் ரமேஷ் (எ) ஐயப்பன் 36, கோகுல் 24 ஆகியோர் இரும்பு கம்பிகளுடன் வந்து பிரவீனையும், அரவிந்தையும் கடுமையாக தாக்கி விட்டு தப்பினர். இருவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.இதைத் தொடர்ந்து பிரவீனின் நண்பர் விஷ்ணு உட்பட 10 பேர் கண்ணனை தேடி வல்லன்குமார விளைக்கு சென்றனர். அங்கு அவர் இல்லை. அவரது சகோதரர் ரமேஷ், ஜெய்கணேஷ் ஆகியோர் மது அருந்தி கொண்டனர் .அவர்களிடம் கண்ணன் எங்கே என்று கேட்டு ரமேஷை சரமாரியாக வெட்டினர். தடுக்க வந்த ஜெய்கணேசுக்கும் வெட்டு விழுந்தது. படுகாயம் அடைந்த இருவரும் உயிருக்கு ஆபத்தான நிலையில் ஆசாரிப்பள்ளம் மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.இது தொடர்பாக 16 வயது சிறுவன் உட்பட இரண்டு பேரை சுசீந்திரம் போலீசார்கைது செய்தனர். எட்டு பேரை தேடுகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !