உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கன்னியாகுமரி / குடிநீர் குழாய் பள்ளத்தில் விழுந்தது டூவீலர் மாநகராட்சி ஊழியர்கள் இருவர் சஸ்பெண்ட்

குடிநீர் குழாய் பள்ளத்தில் விழுந்தது டூவீலர் மாநகராட்சி ஊழியர்கள் இருவர் சஸ்பெண்ட்

நாகர்கோவில்:நாகர்கோவிலில் சாலையோர குடிநீர் குழாய் பள்ளத்தில் டூவீலர் கவிழ்ந்த சம்பவம் தொடர்பாக மாநகராட்சி ஊழியர்கள் இரண்டு பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். கான்ட்ராக்டருக்கு ஐம்பதாயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. நாகர்கோவில் மாநகராட்சிக்கு உட்பட்ட செட்டிகுளத்தில் ஏற்பட்ட குடிநீர் குழாய் உடைப்பை சரி செய்வதற்காக பள்ளம் தோண்டப்பட்டது. பணி முடிந்தபின் பள்ளத்தை மூடாமல் விட்டுவிட்டனர். நேற்று முன்தினம் இரவு டூவீலரில் வந்த இளைஞர் அந்தப்பள்ளத்தில் விழுந்தார். டூவீலர் அதில் சிக்கிக்கொண்டது. இதில் படுகாயம் அடைந்தவர் ஆசாரிப்பள்ளம் மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்த வீடியோ வைரலான நிலையில் மாநகராட்சி ஆணையர் நிஷாந்த் கிருஷ்ணா விசாரணை நடத்தினார். இது தொடர்பாக மாநகராட்சி ஊழியர்கள் மரிய ஜாக்சன் ரவி, ஜஸ்டின் தேவகுமார் 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டனர். கான்ராக்டரிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டதோடு அவருக்கு 50 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை