உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கன்னியாகுமரி / தம்பதியின் அந்தரங்க வீடியோவை அனுப்பி ரூ.10 லட்சம் கேட்டு மிரட்டியோருக்கு வலை

தம்பதியின் அந்தரங்க வீடியோவை அனுப்பி ரூ.10 லட்சம் கேட்டு மிரட்டியோருக்கு வலை

நாகர்கோவில்:கன்னியாகுமரி மாவட்டம், அருமனை அருகே கேரள பகுதியான நெட்டாவைச் சேர்ந்த தம்பதி சுற்றுலா வேன், ஆம்புலன்ஸ் வாடகைக்கு விடும் தொழில் நடத்தி வருகின்றனர். டிரைவர்களாக மாங்கோடு வெள்ளச்சிபாறை பகுதியைச் சேர்ந்த மிதுன், 26, கேரள மாநிலம், நில மாமூடு பகுதியைச் சேர்ந்த சங்கீத், 28, ஆகியோர் பணியாற்றினர்.சில பிரச்னைகளால், இருவரும் வேலையில் இருந்து நின்று விட்டனர். இந்நிலையில், அந்த தம்பதியின் மொபைல் போன் எண்ணுக்கு, அவர்களின் அந்தரங்க வீடியோ வந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். சிறிது நேரத்தில் வெளிநாட்டு எண்ணில் இருந்து வந்த ஓர் அழைப்பில், இந்த வீடியோவை அழிக்க வேண்டுமெனில், 10 லட்சம் ரூபாய் தர வேண்டும் என, பேரம் பேசி உள்ளனர்.இதை அனுப்பியது டிரைவர்கள் சங்கீத் மற்றும் மிதுன் என தெரியவந்ததை தொடர்ந்து, போலீசில் புகார் செய்தனர். முதற்கட்ட விசாரணையில் வீடியோ அனுப்பியது அவர்கள்தான் என உறுதி செய்யப்பட்டது. இருவரும் தலைமறைவான நிலையில், போலீசார் அவர்களை தேடி வருகின்றனர்.போலீசார் கூறுகையில், “ரகசிய கேமரா பொருத்தி வீடியோ எடுத்தனரா அல்லது தம்பதியின் மொபைல் போனில் பதிவு செய்த வீடியோவை அவர்களுக்கு தெரியாமல் திருடி, அதை அவர்களுக்கே அனுப்பி பணம் கேட்டு மிரட்டினரா என்ற கோணத்தில் விசாரிக்கிறோம். இருவரும் பிடிபட்டால் உண்மை தெரியவரும்,” என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை