உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / தலைமை ஆசிரியர் அட்வைஸ் ஒழுக்கத்தை கடைபிடித்தால் கல்விச் செல்வம் கிடைக்கும்

தலைமை ஆசிரியர் அட்வைஸ் ஒழுக்கத்தை கடைபிடித்தால் கல்விச் செல்வம் கிடைக்கும்

க.பரமத்தி: ''ஒழுக்கத்தை கடைபிடித்தால் தான் கல்விச் செல்வத்தை அடையமுடியும்,'' என்று க.பரமத்தி அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பேசினார். கரூர் மாவட்டம் க.பரமத்தி அரசு மேல்நிலைப்பள்ளியில் மாணவர்களுக்கான நல்ல பழக்கம் குறித்து பெற்றோர், மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான கலந்தாய்வு கூட்டம் நடந்தது. பள்ளி தலைமையாசிரியர் (பொ) ஆறுமுகம் தலைமை வகித்தார். பள்ளி ஆசிரியர்கள் இளங்கோ, சத்தியமூர்த்தி, சக்திவேல், மகாமுனி, தீபா முன்னிலை வகித்தனர். தலைமையாசிரியர் ஆறுமுகம் பேசுகையில்,' பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை நல்ல மாணவனாக உருவாக்க ஆசிரியர்களுக்கு உதவ வேண்டும். முதலில் ஒழுக்கம் தேவை. இதனை ஒவ்வொரு மாணவனும் கட்டாயம் கடைபிடித்தால், வாழ்வில் கல்வி செல்வத்தை பெற முடியும். அதேபோல் தங்கள் பிள்ளைகள் சரியாக பள்ளிக்குத்தான் சென்று வருகிறார்களா? இல்லை, ஊரை சுற்றுகிறானா என்பதை பெற்றோர்கள் நன்கு அறிந்து கொ ள்ள வேண்டும். அன்றாடம், பாடம் படிக்க சொல்லி கட்டாயப்படுத்த வேண்டும்,' என்று பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை