உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / டாக்டர்கள், நர்சுகளை பணி செய்யவிடாமல் தடுத்தவர்கள் மீது வழக்கு

டாக்டர்கள், நர்சுகளை பணி செய்யவிடாமல் தடுத்தவர்கள் மீது வழக்கு

டாக்டர்கள், நர்சுகளை பணி செய்யவிடாமல் தடுத்தவர்கள் மீது வழக்குகரூர், :கரூர், அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில், டாக்டர்களை பணி செய்ய விடாமல் தடுத்தவர்கள் மீது, போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.திண்டுக்கல் மாவட்டம், பாளையம் பகுதியை சேர்ந்த செல்வம் என்பவரது மகன் சக்திவேல், 25; இவருடைய உறவினர் முருகேசன் என்பவர் கடந்த, 16ல், விபத்தில் அடிபட்டு, கரூர் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் சிகிச்சையின் போது உயிரிழந்தார். இதனால் சக்திவேல் உள்பட பலர் சேர்ந்து, டாக்டர்கள், நர்சுகள் ஆகியோரை தகாத வார்த்தையால் திட்டி பணி செய்ய விடாமல் தடுத்துள்ளனர். இதுகுறித்து, அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனை ஆர்.எம்.ஓ., குமார், 53, கொடுத்த புகார்படி சக்திவேல் உள்பட, 30 பேர் மீது, பசுபதிபாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை