உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / மானாவாரி நிலக்கடலை சாகுபடி; விவசாயிகளுக்கு விழிப்புணர்வு

மானாவாரி நிலக்கடலை சாகுபடி; விவசாயிகளுக்கு விழிப்புணர்வு

கிருஷ்ணராயபுரம் : பஞ்சப்பட்டி துணை வேளாண்மை விரிவாக்க மையத்தில், மானாவாரி சாகுபடிக்கு தேவையான நிலக்கடலை இருப்பு உள்ளதால், விவசாயிகள் பயன்படுத்தி கொள்ளமாறு வேளாண்மைத்துறை சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.கிருஷ்ணராயபுரம் ஒன்றியத்திற்கு உட்பட்ட, கிராம பகுதிகளில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. இதனால் விவசாயிகள், மானாவாரி நிலத்தில் கோடை உழவு பணிகளில் ஈடுபட்டுள்ளனர். மானாவாரியாக நிலக்கடலை சாகுபடி செய்ய ஆடிப்பட்டம் ஏற்றது. மேலும் நிலக்கடலை பயிரிட, 55 கிலோ கடலை விதைகள் தேவைப்படும்.சாகுபடிக்கு தேவையான நிலக்கடலை விதைகள், பஞ்சப்பட்டி துணை வேளாண்மை விரிவாக்க மையத்தில் இருப்பு உள்ளது.மேலும் அதற்கான தரணி நிலக்கடலை, பயோ மருந்தான டிவிரிடி உயிர் உரங்கள், ஜிப்சம், நுண்ணுட்ட உரம் ஆகியவற்றை விவசாயிகள், 50 சதவீதம் மானியத்தில் பெற்று பயன் பெறலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்