உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / கரூரில் அரசு கேபிள் டிவியில்எச்.டி.,செட்டாப் பாக்ஸ் வழங்கல்

கரூரில் அரசு கேபிள் டிவியில்எச்.டி.,செட்டாப் பாக்ஸ் வழங்கல்

கரூர், : கரூரில், அரசு கேபிள் 'டிவி'யில், எச்.டி., செட்டாப் பாக்ஸ் வழங்கப்பட்டு வருகிறது.தமிழக அரசு கேபிள் 'டிவி' இணைப்புகளுக்கு, எஸ்.டி.,க்கு (ஸ்டேன்டர்ட் டெபனிஷன்) பதில், எச்.டி., (ஹைடெபனிஷன்) செட்டாப் பாக்ஸ் வழங்க வேண்டும் என்று, அரசு கேபிள் ஆப்ரேட்டர்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்தனர். இதை ஏற்று, எச்.டி., செட்டாப் பாக்ஸ் வழங்க அரசு முடிவு செய்தது.இதன்படி, செங்குந்தபுரத்தில் உள்ள தமிழ்நாடு அரசு கேபிள் 'டிவி' நிறுவன அலுவலகத்தில், எச்.டி., செட்டாப் பாக்ஸ் வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. இதில், அரசு கேபிள் 'டிவி' துணை மேலாளர் விஜயா, புதிய எச்.டி.,செட்டாப் பாக்சை, ஆப்ரேட்டர்களுக்கு வழங்கினார். கரூர் மாவட்டத்தில், 94 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கேபிள் 'டிவி' இணைப்புகள் உள்ளன. அதில், முதற்கட்டமாக, 9,000 எச்.டி., செட்டாப் பாக்ஸ் வந்துள்ளது. இதனை தேவைப்படும் சந்தாதாரர்கள், 500 ரூபாய் கட்டணம் செலுத்தி பெற்று கொள்ளலாம். ஆப்ரேட்டர்களுக்கு எச்.டி., பாக்சை காட்சிப்படுத்தி, அவற்றை பயன்படுத்துவது தொடர்பாக, செயல்விளக்கம் அளிக்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை