உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / மின்சார சிக்கன வார விழா விழிப்புணர்வு பேரணி

மின்சார சிக்கன வார விழா விழிப்புணர்வு பேரணி

குளித்தலை, டிச. 22-குளித்தலை மின்வாரியம் சார்பில், மின் சிக்கன சேமிப்பு வார விழா கொண்டாடப்பட்டது. இதை முன்னிட்டு, மின்சார சிக்கன வார விழா விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.கோட்ட மின்வாரிய செயற்பொறியாளர் சரவணன் தலைமை வகித்தார். செயற்பொறியாளர் (பொது) கரூர் ரவிச்சந்திரன், குளித்தலை மற்றும் அய்யர்மலை உதவி கோட்ட பொறியாளர்கள் பாலகுமார், சிராஜுதீன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.பேரணியை குளித்தலை எம்.எல்.ஏ., மாணிக்கம் சுங்ககேட் பகுதியில் கொடியசைத்து துவக்கி வைத்தார். பின், விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை மக்களுக்கும், வணிகர்களுக்கும் வழங்கினர். பேரணியில், குளித்தலை உதவி பொறியாளர் நடராஜன், மின்வாரிய திட்டங்கள் குறித்து விரிவாக பேசினார்.சுங்ககேட் ரவுண்டானாவில் இருந்து துவங்கிய பேரணி, திருச்சி - கரூர் நெடுஞ்சாலை வழியாக பஸ் ஸ்டாண்ட் வந்து, பின்னர் கோட்ட செயற்பொறியாளர் அலுவலகத்தில் நிறைவடைந்தது. பணிக்கம்பட்டி உதவி பொறியாளர் ராம்குமார், குளித்தலை, அய்யர்மலை, பணிக்கம்பட்டி, சின்னப்பனையூர், காவல்காரன்பட்டி, தோகைமலை, சிந்தாமணிப்பட்டி, பஞ்சப்பட்டி உள்ளிட்ட 17 உட்பிரிவுகளுக்குட்பட்ட உதவி பொறியாளர்கள், அலுவலர்கள், பணியாளர்கள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ