உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / கருச்சிதைவு மாத்திரை விற்பனை மருந்துக்கடை விற்பனையாளர் கைது

கருச்சிதைவு மாத்திரை விற்பனை மருந்துக்கடை விற்பனையாளர் கைது

கருச்சிதைவு மாத்திரை விற்பனை மருந்துக்கடை விற்பனையாளர் கைதுகுளித்தலை, :அரியலுார் மாவட்டம், செந்துறையை சேர்ந்த மாதேஷ், 48, குளித்தலை தாலுகா மருந்து ஆய்வாளராக பணியில் உள்ளார். நாகனுார் கிராமத்தை சேர்ந்த குமார் மனைவி கனகவள்ளி என்பவர், கருச்சிதைவு மாத்திரைகள் வாங்கி, உட்கொண்டு கருச்சிதைவு ஏற்பட்டு, திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்தார்.இது குறித்து தகவல் அறிந்த ஆய்வாளர், நேரில் சென்று விசாரித்த போது, தோகமலை கண்ணன் மெடிக்கல் ஷாப்பில், கருச்சிதைவு மாத்திரை வாங்கி சாப்பிட்டதாகவும், இதனால் சிகிச்சை பெறுவதாகவும் கூறியுள்ளார். அரசு அனுமதியின்றி மாத்திரை விற்பனை செய்தது குறித்து, தோகைமலை போலீசில் மருந்து ஆய்வாளர் மாதேஷ் புகார் அளித்தார்.இதையடுத்து, கண்ணன் மெடிக்கல் ஷாப் அழகு ராணி, 60, மெடிக்கல் விற்பனையாளர் ராஜேஷ் கண்ணன், 42, சவுந்தரராஜன் ஆகிய மூன்று பேர் மீது வழக்கு பதிவு செய்து, விற்பனையாளர் ராஜேஷ் கண்ணனை தோகைமலை போலீசார் கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி