பஸ் வாங்கி தருவதாக கூறி ஏமாற்றிய புரோக்கர் கைது
பஸ் வாங்கி தருவதாக கூறி ஏமாற்றிய புரோக்கர் கைதுகுளித்தலை : பஸ் வாங்கி தருவதாக கூறி, பணத்தை வாங்கி கொண்டு திருப்பி தராத புரோக்கரை போலீசார் கைது செய்தனர்.சேலம் மாவட்டம், உத்தம சோழபுரத்தை சேர்ந்தவர் டிரைவர் சக்திவேல், 40. இவர், மாயனுார் ரயில்வே கேட் எதிரில் உள்ள கடையில் நின்று கொண்டு இருந்தார். அப்போது, மஞ்சநாயக்கன்பட்டியை சேர்ந்த பஸ் புரோக்கர் ரத்தினம், 48, பஸ் வாங்கி தருவதாக கூறி, சக்திவேலுவிடம், 9 லட்சத்து, 15 ஆயிரம் ரூபாய் வாங்கினார். ஆனால், பஸ் வாங்கி தராமல் ஏமாற்றி வந்தார். பலமுறை கேட்டதால், ஐந்து லட்சத்து, 25 ஆயிரம் ரூபாயை திரும்ப தந்தார். பாக்கி தொகையான, மூன்று லட்சத்து, 90 ஆயிரம் ரூபாயை தராமல் இருந்து வந்தார்.இந்நிலையில், நேற்று முன்தினம் சக்திவேலுவை, பஸ் புரோக்கர் ரத்தினம் தகாத வார்த்தைகளால் திட்டி கொலை மிரட்டல் விடுத்தார். இதுகுறித்து, மாயனுார் போலீசார் வழக்கு பதிவு செய்து, பஸ் புரோக்கர் ரத்தினத்தை கைது செய்தனர்.